யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
ஹையெஸ் வாகனம் ஒன்றில் வந்த கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றபோது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று 5.30 மணியளவில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நடந்துள்ளது.
வாள்வெட்டு நடத்தி விட்டுத் தப்பிச் சென்றவர்களைத் துரத்திச் சென்று பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக தகவல்களுக்கு யாழ்நாதத்துடன் இணைந்திருங்கள்.