மதுபானசாலைகள் திறந்திருக்கும் நேரத்தில் நாளை முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கலால் திணைக்களம் தெரிவித்தது.
கலால் கட்டளைச் சட்டத்தின் 52ஆவது அதிகார சபையின் உட்பிரிவு 32-1 இன் அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாதாரண தர மதுபானசாலைகள் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அனுமதி பெறாத மதுபானசாலைகளை காலை 8 மணி முதல் இரவு 11 மணிவரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அனுமதி பெற்ற மதுபானசாலைகளை காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த நேரமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
Perhaps I agree with your phrase