தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை யாழ்ப்பாணம், கந்தர்மடம் சந்தியில் நடந்துள்ளது.
மோட்டார்சைக்கிளில் தலைக்கவசம் அணியாது பயணித்த இரு இளைஞர்களில் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மற்றையவர் தப்பியோடியுள்ளார்.
வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரிடம் இருந்து தப்பித்துச் செல்ல முயன்றபோது வீதியில் பயணித்த காருடன் மோதி இவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.