North

டெங்குத் தொற்றால் 11 மாதக் குழந்தை உயிரிழப்பு – யாழில் தொடரும் சோகம்!!

யாழ்ப்பாணம், தாவடியைச் சேர்ந்த 11 மாத ஆண் குழந்தை ஒன்று டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது.

மதுரன் கிருத்தீஸ் என்ற 11 மாத ஆண் குழந்தையே காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது.

காய்ச்சலுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்தது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

அதேவேளை, 25 வயது இளைஞன் ஒருவர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு ஆபத்தான கட்டத்தில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் தீவிரம் பெற்றுள்ளது.

தொடர்ச்சியான காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts