வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் திருட முயன்றவரைத் தீண்டிய பாம்பு!

Yarl Naatham

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் திருட முயன்ற ஒருவரைப் பாம்பு தீண்டியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர் முள்ளியவளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மூவர் திருடும் நோக்குடன் ஆலயத்துக்குள் நுழைந்துள்ளனர். ஆலயக் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றுள்ளனர்.

அதன்பின்னர் அவர்கள் ஆலயத்தின் பாதுகாப்பு கண்காணிப்புக் கமரா இணைப்புக்களைத் துண்டிக்க முயன்றபோதே அவர்களில் ஒருவரைப் பாம்பு தீண்டியுள்ளது.

பாம்பு தீண்டியவரைத் தூக்கிக் கொண்டு ஏனைய இருவரும் அந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் அதிசயம் மிக்கதாக மக்களால் வணங்கப்படுகின்றது.

வற்றாப்பளை கண்ணகி அம்மனை வழிபடுபவதற்கு நாடு முழுவதும் இருந்து மக்கள் வருவது வழமை.

Share This Article
Leave a comment
error: Content is protected !!