யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இன்று மாலை பொலிஸாரால் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விஷாந்தவின் வழிகாட்டலில், பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் நெறிப்படுத்தலில் இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் மற்றும் நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் என்பனவற்றில் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.