பெறுமதி சேர் வரி (வற் வரி) அதிகரிப்புக் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமான பிரிவின் பணிப்பாளர் எரந்த கொடிதுவக்கு நேற்று இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் புதிய வரித் திருத்தத்துக்கு அமைய இதுவரை 15 வீதமாக இருந்த வற் வரி 18 வீதமாக உயர்த்தப்படுகின்றது.
பல பொருள்களுக்கு அறிவிடப்படும் வரி 3 வீதத்தால் அதிகரிக்கப்படும் நிலையில், இதுவரை வரி அறவிடப்படாத பல பொருள்களுக்கு எதிர்வரும் முதலாம் திகதி முதல் 18 வீத வற் வரி அறிவிடப்படவுள்ளது.