தேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் கிளிநொச்சி, வட்டக்கச்சியில் நடந்துள்ளது.
வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத் தேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞரே உயிரிழந்தவராவார்.
வீடியோ வடிவில் செய்திகளைப் பார்வையிட: ▶️ https://www.youtube.com/watch?v=YYZaOi9C1hI
வவுனியா, பூந்தோட்டத்தைச் சேர்ந்த 29 வயதான ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற இளைஞரே உயிரிந்தவராவார்.
கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், இளைஞனின் உடல் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இராமநாதபுரம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.