எவருக்காவது TIN இலக்கம் கிடைக்காவிட்டால் அல்லது இலக்கத்தைப் பெறுவதில் ஏதாவது சிக்கல்கள் இருப்பின் மாகாண உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை அல்லது பிரதேச செயலகத்தைத் தொடர்புகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன, புதிய முறைமை ஒன்று அறிமுகப்படுத்தும்போது ஆரம்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுவது வழமை என்று குறிப்பிட்டார்.
வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெறாமைக்காக வழக்குத் தொடுருதல் அல்லது நீதிமன்றத்துக்குப் பரிந்துரைப்பது போன்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
முறைசாரா அமைப்பை ஒரு முறையான அமைப்புக்குள் கொண்டு வருவதை ஒரே இரவில் செய்ய முடியாது என்று கூறிய அவர், தற்சமயம் பலர் TIN இலக்கத்தைப் பெற முயற்சிப்பது நல்ல விடயம் என்று கூறினார்.
ஒரே நேரத்தில் பலர் தரவுகளை உட்செலுத்த முயலும்போது அங்கு சில தாமதங்கள் ஏற்படும் என்று கூறிய அமைச்சர், இந்த நிலைமைகள் சிறிய கால அவகாசத்தில் சீரமையும் என்றும் தெரிவித்தார்.
TIN இலக்கம் பெற்ற அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறிய அமைச்சர் பந்துல, வரிக்கு உட்பட்டவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
Very interesting topic, thanks for putting up.Blog monry