தமிழரசுக் கட்சி தலைவர் அக்கப்போர் – வாக்கெடுப்பு மூலமே தலைவர் தெரிவு

Yarl Naatham

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். தலைவர் பதவிக்கு போட்டியிடுவோரிடையே இன்று நடந்த சந்திப்பில் இணக்கம் ஏற்படாத நிலையில், வாக்கெடுப்பு மூலமே தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழரசுக்கட்சியின் விசேட அரசியல் குழுக் கூட்டம் நேற்று திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இல்லத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பாகச் சுமார் 3 மணி நேரம் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரனும் விண்ணப்பித்துள்ளனர். நேற்று நடந்த கூட்டத்தில் வாக்கெடுப்பின்றி இணக்கப்பாட்டின் அடிப்படையில் தலைவரைத் தெரிந்தெடுப்பது தொடர்பாக வலியுறுத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் தங்களிடையே இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். எனினும் அவர்களிடையே இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

அதையடுத்து, எதிர்வரும் 21ஆம் திகதி வாக்கெடுப்பின் மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். அதேநேரம் திட்டமிட்டவாறு கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a comment
error: Content is protected !!