மஹிந்த ராஜபக்சவும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடுக்கடலில் இரு கப்பல்களில் விருந்துபசாரத்தில் ஈடுபட்டனர் என்று வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான இரு கப்பல்களில் இந்த விருந்துபசாரம் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தச் சம்பவம் இரு தினங்களுக்கு முன்னர் நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அரச வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான விருந்துபசாரங்கள் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
வெளியான வீடியோக் காட்சிகள் மற்றும் அரசாங்கத் தரப்பு அமைச்சரின் விளக்கம் என்பவற்றை இந்த இணைப்பில் விரிவாகக் காணுங்கள். ▶ http://tinyurl.com/2k9d9r7s