கிளிநொச்சி, கோவிந்தன் கடைச் சந்தியில் உள்ள நீர்ப்பாசனக் கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவர் உயிரிழந்த நிலையில மீட்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, கல்மடுவைச் சேர்ந்த தயாளன் தனுசன் என்ற இருபது வயது இளைஞரும், அழகாபுரியைச் சேர்ந்த கிருஸ்ணன் சதீசன் என்ற 18 வயது இளைஞனுமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி நீர்ப்பாசனக் கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
வீதியில் உள்ள வேகக்கட்டுப்பாட்டு குறியீட்டுக் கம்பங்களை உடைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிள் கால்வாய்க்குள் பாய்ந்துள்ளது.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜமீல் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார். உடல் கூறாய்வுச் சோதனைக்காக உடல்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.