North

யாழ்ப்பாணத்தில் இளம்தாய் உயிரிழப்பு – டெங்குத் தொற்றுக் காரணமா?

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

33 வயதான திருமதி சங்கரி மதிரூபக்குருக்கள் என்ற பெண்ணே உயிரிழந்தவராவார். ஒரு குழந்தையின் தாயான இவர் ஆசிரியையாகக் கடமையாற்றுகின்றார்.

இவருக்கு ஐந்து நாள்கள் தொடர் காய்ச்சல் காணப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இவரது உயிரிழப்புக்கு டெங்குக் காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. மருத்துவ அறிக்கையில் ஈமோகுளோபின் குறைப்பாட்டால் உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts