கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் இன்று நடந்த ரயில் விபத்தில் இளம் குடும்ஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் பிற்பகல் 4.30 மணியளவில் நடந்துள்ளது.
முறிகண்டியைச் சேர்ந்த 43 வயதான கேதீஸ்வரன் விஜயானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளவராவார். டிப்பர் வாகனச் சாரதியான இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித் யாழ்ராணி ரயிலுடன் மோதியே விபத்து நடந்துள்ளது.
சடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
I like this web site very much, Its a very nice
post to read and get information.Expand blog