இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் தெரிவு ஆரம்பம் – யார் புதிய தலைவர்?

Yarl Naatham

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் சற்றுமுன்னர் திருகோணமலையில் ஆரம்பமாகியுள்ளது.

கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் ஆரம்பமானது.

தற்போது புதிய தலைவரைத் தெரிவு செய்தற்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது.

தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறீதரன் இடையே போட்டி நிலவுகின்றது.

மூன்றாவது வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றொரு வேட்பாளரான சி.சிறீதரனுக்கு ஆதரவு வழங்குகின்றார்.

Share This Article
error: Content is protected !!