இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று முற்பகல் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு போட்டியாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் போட்டியில் இருந்து விலகிக்கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்தத் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் 340 பேர் வாக்களித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு ஆதரவாக 186 வாக்குகளும், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு ஆதரவாக 137 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதேவேளை, கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவால் இன்று மத்திய குழு உறுப்பினர்கள் என ஒரு பட்டியல் வழங்கப்பட்டதால் வாக்கெடுப்புக்கு முன்னர் அங்கு சலசலப்பு ஏற்பட்டிருந்தது.
தலைவர் தெரிவின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஊடகங்களைச் சந்தித்தனர். புதிய தலைவரை ஊடகங்கள் முன்பாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எதிர்காலத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் என்று தெரிவித்திருத்தார்.