கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் – கோர விபத்தில் பெண் மரணம்!

Yarl Naatham

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸூம், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ஹையேஸ் வாகனமும் விபத்துக்குள்ளானத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் கிளிநொச்சி, ஆனையிறவுவில் நடந்துள்ளது.

இ.போ.ச. பஸ் வீதியில் படுத்துறங்கிய மாடுகளுடன் விபத்துக்குள்ளாகிக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஹையேஸ் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளன.

Share This Article
Leave a comment
error: Content is protected !!