யாழ்ப்பாண மாவட்டதுக்குப் பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள காளிங்க ஜெயசிங்க இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதுவரை கொழும்பு குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பு அதிகாரியாக செயற்பட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் இன்று சுப நேரத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவியேற்றார்
யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மா அதிபராக கடமை ஆற்றிய மஞ்சுளா செனரத் கொழும்புக்கு இடமாற்றலாகிச் சென்றுள்ளார்.