முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல இன்று வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Human Immunoglobulin மருந்து இறக்குமதியில் மோசடி ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் இன்று வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த அவர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.