North

ஒரு நிமிட பொறுமையின்மை பலியெடுத்தது உயிரை – கிளிநொச்சியில் சோகம்!

கிளிநொச்சியில் ஒருவர் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் நடந்துள்ளது.

கிளிநொச்சி, விநாயகபுரத்தைச் சேர்ந்த 44 வயதான சிவராசமுத்தையா சசிவதனன் என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் 4 பிள்ளைகளின் தந்தையாவார்.

கிளிநொச்சி, டிப்போ வீதியில் ரயில் நிலையத்துக்கு அண்மையாக உள்ள ரயில் கடவையில் இந்த விபத்து நடந்துள்ளது.

மூடப்பட்டிருந்த ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றபோது இவர் ரயிலுடன் மோதுண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts