உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளன.
இலங்கை உட்பட பல நாடுகளில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் தங்கள் கணக்குகளைச் செயற்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இணையச் சேவை செயலிழப்பைக் கண்காணிக்கும் வலைத்தளமான டவுன்டெக்டரின் அறிக்கைகள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் திரெட் தளங்களில் தடங்கல்கள் வேகமாக உயர்ந்ததைக் காட்டுகின்றன.
இந்த முடக்கம் தொடர்பாக பயனாளர்களிடம் இருந்து முறைப்பாடுகள் வந்துள்ளபோதும், மெட்டா நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாகச் சிக்கலை ஒப்புக்கொள்ளவில்லை.