வவுனியாவில் 24 வயது இளம் யுவதி ஒருவர் தோட்டக் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. வவுனியா, சமனங்குளத்தைச் சேர்ந்த 24 வயதான தவரூபன் லக் ஷிகா என்ற யுவதியே உயிரிழந்தவராவார்.
தோட்டக் கிணற்றில் உள்ள நீரிறைக்கும் மோட்டரை லக் ஷிகா இயக்க முற்பட்டபோது, அதன் குழாய் கழன்றுள்ளது.
அந்தக் குழாயை பொருத்த முயற்சித்தபோது, தடுமாறி அவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளார்.
அயலர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினர்.