பிரான்ஸில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த பெண் ஒருவர் கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், அராலிப் பகுதியில் தங்கியிருந்த 62 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸில் சுகவீனமடைந்திருந்த இவர், சித்த மருத்துவத்துக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
அராலியில் தங்கியிருந்த இவருக்கு சில தினங்களாகக் கடும் காய்ச்சல் காணப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நேற்றுமுன்தினம் அவர் உயிரிழந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.