யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட மதிய உணவுப் பொதியில் மட்டைத்தேள் ஒன்று காணப்பட்டதை அடுத்து, அந்த உணவகம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதர் பா.சஞ்சீவனுக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, அந்த உணவகம் கடந்த சனிக்கிழமை சோதனைக்குட்படுத்தப்பட்டது.
பொதுச் சுகாதார பரிசோதகரால் முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாமல், அந்த உணவகம் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கியமை சோதனையில் கண்டறியப்பட்டது.
அதையடுத்து இன்று திங்கட்கிழமை கடை உரிமையாளருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதுிமன்றில் வழக்குத் தாக்கப்பட்டது.
வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, உணவக உரிமையாளருக்கு நீதவான் 45 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார். உணவகத்தைத் திருத்தியமைக்கும் வரையில் சீல் வைத்து மூடுமாறும் பொதுச்சுகாதார பரிசோதகருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.
அதையடுத்து பொதுச் சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் இன்று அந்த உணவகத்தைச் சீல் வைத்து மூடினார்.