News

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை – கல்வி அமைச்சின் பிந்திய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு விடுத்துள்ள அறித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 6 உயிரிழந்துள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என்பற்றாலேயே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

Related Posts