News

சிறீலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான அநுர பதவியேற்பு

சிறீலங்காவின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திசாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு எளிமையான முறையில் காலையில் நடைபெற்றது.

பதவியேற்றபின்னர் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என்று தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில், தற்போதைய நாடாளுமன்றம் இந்தவாரம் கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts