News

7 சம்பவங்கள் தொடர்பில் துரித விசாரணைகள் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அதிரடி உத்தரவு

இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் ஊடகவியலாளர் த.சிவராம் படுகொலை என்பன உட்பட 7 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம், வர்த்தகர் தினேஷ் ஸ்காப்டரின் மரணம், வெலிகமவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தமை ஆகிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிப்புரை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் பதில் பொலிஸ்மா அதிபருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருடனும், உரிய பொலிஸ் பிரிவுகளுடனும் இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts