North

கட்சி சுவரெட்டி ஒட்டியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு – முல்லைத்தீவில் சோகம்!

அரசியல்கட்சி ஒன்றின் தேர்தல் பரப்புரைச் சுவரெட்டி ஒட்டியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துவிநாயகபுரத்தில் நேற்று வியாழ்க்கிழமை நடந்துள்ளது.

இரவு 11 மணியளவில் கட்சி ஒன்றின் சுவரெட்டியை ஒட்ட முயன்ற இவர், மின்சாரம் வழங்கப்பட்டிருந்த யானைப் பாதுகாப்பு வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

முத்துஐயன்கட்டைச் சேர்ந்த 45 வயதுடைய காசிலிங்கம் லங்காதீபன் என்பவரே உயிரிழந்தவராவார்.

தற்போது இவரது உடல் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Posts