வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்துக்குத் தற்போது கிடைக்கும் கனமழை எதிர்வரும் 29ஆம் திகதிவரை தொடரும் வாய்ப்புள்ளது என்றும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் எதிர்வரும் 29ஆம் திகதிவரை அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6ஆம் திகதி அல்லது 7ஆம் திகதி மீண்டுமொரு தாழமுக்கம் வங்காள விரிகுடாவில் உருவாகலாம். நவம்பர் மாதத்தில் மூன்று தாழமுக்க நிகழ்வுகள் தோன்றும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.