North

தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் மீது யாழ்ப்பாணத்தில் கடும் தாக்குதல்!

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று நீர்வேலிப் பகுதியில் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த பெண் உட்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுப் பின்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கொட்டன்கள், தடிகள் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பெண் ஒருவரும், மற்றொருவரும் காயங்களுக்குள்ளாகினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts