நாடாளுமன்றத் தேர்தல் திகதியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்று அரசாங்க உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 10ஆவது பிரிவின்படி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாள் தொடர்பில் சில சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்தே தேர்தல் திகதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகின்றது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளில் இருந்து ஐந்து வாரங்களுக்குக் குறையாமலும் 7 வாரங்களுக்குக்கு கூடாமலும் வாக்கெடுப்புக்கான திகதியைத் தீர்மானிக்க வேண்டும்.
வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த ஒக்ரோபர் 11ஆம் திகதி முதல் கணக்கிடப்படும் ஐந்துவார காலம் 15ஆம் திகதியும், 7 வாரகாலம் நவம்பர் மாதம் 29ஆம் திகதியும் முடிவடையும்.
தற்போது நவம்பர் 14ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று அறிக்கப்பட்டுள்ளநிலையில், அன்று தேர்தல் நடத்துவது சட்டத்துக்கு முரணானது என்ற வாதம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவும் கவனம் செலுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.