North

யாழில் டெங்கு ஒழிப்புக்குச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி – சைக்கிளின் மீது வீழ்ந்து இறந்திருந்த முதியவர்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் முதியவர் ஒருவர் வீடொன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 79 வயது முதியவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

அந்தப் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகரும், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இன்று சனிக்கிழமை டெங்கு ஒழிப்பு களப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

அந்தப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குக் களத்தரிசிப்புக்காகச் சென்றபோது, முதியவர் ஒருவர் சைக்கிளின் மீது வீழ்ந்தநிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

அதையடுத்து இது தொடர்பாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் ஒப்படைக்கப்பட்டது. மாரடைப்புக் காரணமாகமே முதியவர் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts