யாழ்தேவி ரயில் சேவை நாளைமறுதினம் திங்கட்கிழமை (28.10) ஆரம்பமாகும் என்று ரயில்வே பொதுமுகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை காலை 5.45 மணிக்குக் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கு யாழ்தேவி ரயில் சேவை ஆரம்பமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ரஜரட்ட ரயில் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு பெலியத்தவில் இருந்து அநுராதபுரம்வரை இயங்கப்படும். அதே ரயில் அநுராதபுரத்தில் இருந்து பெலியத்தவரை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படும்.
வடக்கு ரயில் பாதையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டத்தைத் தொடர்ந்து ரயில்வே இயந்திரச் சாரதிகள் மற்றும் அதிகாரிகளின் உடன்பாட்டுடன் வடக்குக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு ரயில் பாதையின் மாஹோ மற்றும் அநுராதபுரத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்குமு் மக்கள் ரயில் கடவைகளைக் கடக்கும்போது அவதானமாக இருக்க வேண்டும் என்றும் ரயில்வே பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.