முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை நடந்துள்ளது. முத்தையன்கட்டைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் ஒட்டுசுட்டான் பிரதேச மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை, இந்தப் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது என்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.