அரச ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு நிச்சயம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வின் தொகையைத் தற்போது கூறமுடியாது என்றும், திறைசேரியில் உள்ள நிதியை மதிப்பாய்வு செய்த பின்னரே அதைத் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களுக்கும் தனியார் ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்பதே அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கு விருப்பம். ஆனால், திறைசேரியில் உள்ள நிதியின் பிரகாரம்தான் குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.