இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒக்ரேன் 95 ரகப் பெற்றோல் 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 371 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசலின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 313 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒக்ரேன் 92 ரகப் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசல், மண்ணெண்ணை என்பவற்றின் விலைகளில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.